வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம்.. சரித்திர சாதனை படைத்த இந்தியா..

Update: 2023-07-15 04:58 GMT

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்பைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இஸ்ரோவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது. இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும், மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று பிரதமர் அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்.


நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் 3-வது பயணமான சந்திரயான்-3-ன் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். பின்னர் அவர் கூறும் பொழுது, “இந்தியாவின் விண்வெளித்துறையைப் பொறுத்தவரை 2023 ஜூலை 14-ம் தேதி எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும். நமது 3-வது நிலவு விண்கலமான சந்திரயான்-3 தனது பயணத்தை தொடங்கவுள்ளது. இந்த மகத்தான பயணம் நமது நாட்டின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் தாங்கிச்செல்லும்".


சுற்றப்பாதையை உயர்த்தும் முயற்சிகளுக்கு பின்னர் சந்திரயான்-3, நிலவின் மாற்ற பாதையில் செலுத்தப்படும். 3,00000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, வரும் வாரங்களில் அது நிலவை சென்றடையும். விண்கலத்தில் அறிவியல் உபகரணங்கள் நிலவின் மேல்தளத்தை ஆய்வு செய்து நமது அறிவைப் பெருக்கும். நமது விஞ்ஞானிகளின் முயற்சியால் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு மிக வளமையான வரலாறு உள்ளது.

Input & Image courtesy:  News

Tags:    

Similar News