சுற்றுலா துறையின் மூலம் ரூ.38 லட்சம் கோடி அள்ள திட்டமிடும் இந்திய சுற்றுலாத்துறை - எப்படி?

Update: 2022-06-22 11:36 GMT

இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று சொல்லப்படும் ஜி.டி.பி.யில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு 2028ல் ரூ.38 லட்சம் கோடியாக இருக்கும் என்று இந்தியன் பிரான்ட் ஈக்விட்ட அமைப்புடைய அறிக்கையில் கணித்துள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது சுற்றுலாத்துறை. கடந்த 2020 மற்றும் 2021ல் சுற்றுலாத்துறை உலகளவில 4.5 லட்சம் கோடி டாலர் அளவில் மாபெரும் இழப்பினை சந்தித்தது.

தற்போதைய காலக்கட்டத்தில் கொரோனா தொற்று ஓய்ந்து வரும் நிலையில் மெல்லமாக வீழ்ச்சியில் இருந்து சுற்றுலாத்துறை மீண்டு வருகிறது. அதாவது உலக சுற்றுலா கவுன்சில் மதிப்பீட்டின்படி 2019 உடன் ஒப்பிடும்போது உள்நாட்டு பயணிகள் செலவிடுவது 45 சதவீதம் குறைந்திருக்கிறது. வெளிநாட்டு பயணிகள் செலவிடுவது 69.4 சதவீதமாக குறைந்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியன் பிரான்ட் ஈக்விட்டி அமைப்பின் அறிக்கை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஜி.டி.பி.யில் சுற்றுலாத்துறையின் நேரடி பங்களிப்பு 2019 முதல் 2028 வரையிலான காலக்கட்டத்தில் 10.3 சதவீதம் ஆண்டுக்கு வளர்ச்சி விகிதம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். 2020ல் இந்திய ஜி.டி.பி.யி.ல் பயணம் மற்றும் சுற்றுலாத்துறை பங்களிப்பாக சுமார் ரூ.9 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 2028ம் ஆண்டுக்குள் ரூ.38 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News