தேவையை விட கூடுதலாக 4 மடங்கு ஆக்ஸிஜனை பெற்று ஏமாற்றிய டெல்லி மாநிலம் - உச்ச நீதிமன்றம் விளாசல்!

Update: 2021-06-25 09:01 GMT

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வந்தது. அந்த சமயத்தில் பல இடங்களில் ஆக்ஸிஜனுக்கான தேவை மிகவும் அதிகரித்தது. குறிப்பாக டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாக அந்த மாநிலம் தெரிவித்தது. இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழு சமர்ப்பித்த அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சத்தில் இருந்தபோது தேவையை விட கூடுதலாக 4 மடங்கு ஆக்ஸிஜனை டெல்லி பெற்றுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தது.


கொரோனா இரண்டாவது அலையின் பரவல் உச்சத்தில் இருந்த போது டில்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சில மருத்துவமனைகள் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதன்காரணமாக உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, டில்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தலைமையில் டில்லி அரசு முதன்மை உள்துறை செயலர் பூபிந்தர் பல்லா, மேக்ஸ் ஹெல்த்கேர் இயக்குனர் சந்தீப் புத்திராஜா, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை செயலர் சுபோத் யாதவ் ஆகியோர் அடங்கிய ஆக்சிஜன் தணிக்கைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  

அந்த அறிக்கையில், டில்லியில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஏற்ற அளவான 289 மெட்ரிக் டன்னை விட 4 மடங்கு கூடுதலாக 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டில்லி மருத்துவமனைகள் கூடுதலாக பெற்றுள்ளன. டில்லியில் ஆக்சிஜனின் சராசரி நுகர்வு 284 முதல் 372 மெட்ரிக் டன் வரை இருந்தது. டில்லி அரசாங்கத்தின் தகவல்கள் படி ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரையில் ஆக்சிஜன் நுகர்வு மொத்தம் 350 மெட்ரிக் டன்னை தாண்டவில்லை. ஆனால் டெல்லி, இந்த கொரோனா சமயத்தில் தேவைக்கு அதிமாக ஆக்ஸிஜனை பெற்றுள்ளதால், ஆக்சிஜன் தேவைப்பட்ட மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டதாக அந்த குழு அதிர்ச்சி தகவலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News