மணிப்பூர், திரிபுராவில் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்கு விழா கோலம் பூண்டுள்ளது.

Update: 2022-01-04 04:35 GMT

பிரதமர் மோடி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்கு விழா கோலம் பூண்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் வளர்ச்சியடைய வேண்டி பல திட்டங்களை தொடங்கி வைக்கிறது. மற்ற மாநிலங்களில் உள்ள வளர்ச்சியை வடகிழக்கு பகுதிகளிலும் கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறார். அந்த வகையில் மணிப்பூர், திரிபுரா மாநிலங்களுக்கு இன்று பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இம்பாலில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்

அதன்படி சாலை கட்டமைப்பு, குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த திட்டங்களில் அடங்கும். 350க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களையும் மணிப்பூர் மாநில மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Polimer

Image Courtesy: India Tv News

Tags:    

Similar News