அயோத்தி ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் : 5 பேர் அதிரடி கைது!

Update: 2021-06-22 13:27 GMT

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது. இங்கு கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நாடு முழுவதும் பலர் ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, நன்கொடை என்ற பெயரில் மக்களிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா என்ற பெயரில் போலி இணையதளம் தொடங்கி, அதில், ஒரு வங்கிக் கணக்கு எண்ணை பதிவிட்டு, கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி பல நபர்கள் தங்களுடைய பணத்தை ராமர் கோயிலுக்கு வழங்குவதாக நினைத்து, அவர்கள் தெரிவித்த வாங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.இவ்வாறு நன்கொடையாக மக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை இந்த ஐந்து நபர்கள் மோசடியாகப் பெற்றுள்ளனர். ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடியாக பணம் பெறுவதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

 இதனையடுத்து நொய்டா சைபர் கிரைம் போலீசாரும், லக்னோ சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து பயங்கர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது சிக்கிய ஐந்து நபர்கள், ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து சிக்கிய அந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த ஐவரும் கூட்டு சேர்ந்து கிழக்கு டில்லியின் புதிய அசோக் நகரில் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News