கொரோனா காரணமாக 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு: இந்திய மருத்துவச் சங்கம் தகவல்!

Update: 2021-05-26 13:03 GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பல்வேறு மக்களுடைய தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டு வருகிறார்கள். மக்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தங்களுடைய வீட்டில் இருந்துகொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் இந்தக் கடுமையான சூழ்நிலையில் கூட, கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் மருத்துவர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் சுமார் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தற்போது தகவலை தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்களும், முன்கள பணியாளர்களும் இந்த பெருந்தொற்றுக்கு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவத்தொடங்கியதில் இருந்து, இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


இதில் அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் 103 மருத்துவர்கள், பீகாரில் 96 மருத்துவர்கள், உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், அசாமில் 6 மருத்துவர்கள், தமிழ்நாட்டில் 18 மருத்துவர்கள், கேரளாவில் 4 மருத்துவர்கள், மராட்டியத்தில் 15 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மக்கள் நன்மைக்காக மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் பொதுமக்கள் சார்பில் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

Similar News