முதன்முறையாக ட்ரோன் தயாரிப்பில் முதலீடு செய்து மத்திய அரசின் அதிரடி திட்டம்!

ட்ரோன் தயாரிப்பில் ரூ. 5,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2021-09-17 13:26 GMT

மத்திய அரசாங்கம் பல்வேறு முதலீடுகளில் முதலீடு செய்து இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளையும், மேலும் நாடு முன்னேற்றத்திற்கு தேவையான செயல்களையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தற்சார்பு இந்தியா திட்டத்தின் லட்சியத்தை அடையும் நோக்கில் மற்றொரு நடவடிக்கையாக, ட்ரோன் எனப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள், அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.


குறிப்பாக இந்த ட்ரோன், போக்குவரத்து துறையில் மிகப்பெரிய பங்கை கூற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர் இதுபற்றி கூறுகையில், "ட்ரோன் மற்றும் அது உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 120 கோடி வழங்கப்படுகிறது. ட்ரோன் துறையின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவை விட இது 1.5 மடங்கு இது அதிகமாகும். இத்துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் மூலமாக சுமார் 10,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்.


வருகிற 2030 ஆண்டுக்குள் சர்வதேச ட்ரோன் மையமாக இந்தியாவை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த இலக்கை எட்ட தேவையான ஆதரவை தொழில்துறை, சேவை விநியோகம் மற்றும் நுகர்வோருக்கு அமைச்சகம் வழங்கும். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 30,000 கோடி எனும் அளவில் இது வளரும், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது" என்று அவர் கூறினார். 

Input & Image courtesy:Republicworld

 


Tags:    

Similar News