கழிவுகளில் இருந்து எரிசக்தி திட்டம்.. ரூ 57.48 கோடியை முதலீடு செய்த மத்திய அரசு..
கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை மத்திய அரசு சுமார் ரூ.57.48 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 01.04.2021 முதல் 31.03.2026 வரையிலான காலத்திற்கு ரூ.1715 கோடி வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று 2022 நவம்பரில் தேசிய உயிரி எரிசக்தி திட்டத்தை அறிவித்தது. முதல் கட்டமாக ரூ.858 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் நிதியுதவி மூலம் உயிரி எரிசக்தி நிலையங்களை அமைக்க உதவுகிறது.
ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் செயல்படுத்தப்படும் கோபர்தன் திட்டத்தின் கீழ், கிராமங்கள், வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களில் சமூக உயிரி எரிவாயு ஆலைகள் அமைக்க ஒரு மாவட்டத்திற்கு ரூ.50.00 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. 02.11.2022 தேதியிட்ட கழிவுகளிலிருந்து எரிசக்தி திட்ட வழிகாட்டுதல்களின்படி, மத்திய நிதி உதவி வழங்குவதற்கு முன்பு, நியமிக்கப்பட்ட ஆய்வு முகமைகளால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு செயல்திறன் கண்காணிப்புக்காக ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இதில் குறைந்தபட்சம் 72 மணி நேரம் ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும், இதன் போது ஆலை அதன் மதிப்பிடப்பட்ட திறனில் 80 சதவீத சராசரி செயல்பாட்டு திறனை பராமரிக்க வேண்டும். மத்திய அரசு தற்போது புதுப்பிக்க தக்க எரிசக்தி வளங்களில் அதிகமாக முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News