மாநிலப் பேரிடர் மீட்பு நிதி ரூ.6,194.40 கோடி... தமிழகம் உட்பட பயன் பெறும் மாநிலங்கள்...

Update: 2023-07-02 09:47 GMT

மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் வழங்கி இருக்கிறார். மாநில பேரிடர் மீட்பு நிதியாக மத்திய அரசு மாநிலங்களுக்கு அவப்பொழுது ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் ஏற்றவாறு நிதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் பயன்பெறும் பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.


மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், சத்தீஸ்கர், மேகாலயா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு ரூ.1,209.60 கோடி 2022-23-ம் நிதியாண்டுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மாநில அரசுகள் நடப்பு மழைக்காலத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News