விவசாயிகள் மகிழ்ச்சி : ஒரு குவிண்டால் நெல்லுக்கு 72 ரூபாய் அதிகரித்த மத்திய அரசு!

Update: 2021-06-12 01:30 GMT

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த நிதி ஆண்டில் நெல்லுக்கான அடிப்படை ஆதார விலையை கடந்த நிதி ஆண்டை விட ஒரு குவிண்டாலுக்கு 72 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக  வேளாண் துறை அமைச்சர் அறிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில் நெல்லுக்கான அடிப்படை விலையாக ஒரு குவிண்டாலுக்கு 1,868 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் ஒரு குவிண்டாலுக்கு 1,940 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சென்ற நிதி ஆண்டை விட ஒரு குவிண்டாலுக்கு 72 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்க் தோமர் "கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு இந்த அடிப்படை ஆதார விலை உயர்வு பெருமளவில் பயனளிக்கும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Tags:    

Similar News