மக்களின் கனவுகளும், ஆசைகளும் பா.ஜ.க 8 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேறியுள்ளது - அமித்ஷா பெருமிதம்!

Update: 2022-05-31 08:23 GMT
மக்களின் கனவுகளும், ஆசைகளும் பா.ஜ.க 8 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேறியுள்ளது - அமித்ஷா பெருமிதம்!

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தற்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் செய்த நன்மைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க. ஆட்சி குறித்து குறிப்பிடுகையில், தங்களின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை மோடியின் 8 ஆண்டுகால ஆட்சி மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Source: Dinamalar

Image Courtesy: The Week

Tags:    

Similar News