இந்தியாவில் 80% பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு - பரிசோதனை முடிவுகள்!

Update: 2021-07-20 12:54 GMT

இந்தியாவில் புதிதாக உருமாறிய கொரோனா வைரசை பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்பொழுது புதிதாக பாதிக்கப்படுவோரின் அதிகமான டெல்டா வைரஸ் காரணமாக தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு முடிவு தற்பொழுது தகவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக புதிதாக பாதிக்கப்படும் 80% பேருக்காவது இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உருமாறிய தொற்று மேலும் உருமாற்றம் அடைந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய சார்ஸ்கோவிட்-2 மரபியல் அமைப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. இந்த அமைப்பின் கீழ் 28 பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் துணை தலைவர் டாக்டர் N.K.அரோரா அவர்கள் இதுபற்றி கூறுகையில், "கொரோனா வைரசில் உருமாறிய புதிய வகை வைரஸ் கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் கண்டறியப்பட்டது. இது டெல்டா வகை தொற்று என அழைக்கப்படுகிறது. இந்த வகை தொற்று மனித உடல்களில் மிக வேகமாக பெருகும் தன்மை உடையது. எனவே தான் நுரையீரல் பாதிப்புகள் கடுமையாக உள்ளன.


முதல் அலையில் பரவிய ஆல்பா வகை தொற்றை விட இந்த டெல்டா வகை, 40 - 60 சதவீதம் தீவிர தன்மையுடன் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட 80 நாடுகளில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வகையைச் சேர்ந்த தொற்று தமிழகம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த டெல்டா பிளஸ் தொற்றில் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் சார்பாக பரிந்துரைக்கப்படுகிறது.

Similar News