ராமம்: உத்திர பிரதேசத்தில் 800 ராமநவமி ஊர்வலங்களை அமைதியாக நடத்திக் காட்டிய யோகி ஆதித்யநாத் அரசு!
"உத்திரபிரதேசத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் எந்த ஒரு கலவரமும் நடக்கவில்லை" என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, நாடு முழுவதும் ராமநவமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. " ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷங்கள் எழுப்பி, பல இடங்களில் ராமநவமி ஊர்வலங்கள் சிறப்பாக நடைபெற்றது.
ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. அதனை சீர்குலைக்கும் விதமாக, சமூக விரோதிகள் பல இடங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் பல முக்கிய மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன.
ஆனால், நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட மாநிலம் என்று இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸார்களால் முத்திரை குத்தப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தில், 800 ராமநவமி ஊர்வலங்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் " உத்திரபிரதேசத்தில் ராம நவமி சிறப்பாக நடைபெற்றது. 25 கோடி மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்தில், 800 ராமநவமி ஊர்வலங்கள் அமைதியாக நடைபெற்றுள்ளது. ரமலான் மாதத்தில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் எந்த ஒரு கலவரமும் இல்லை.
என்று யோகி ஆதித்யநாத் கெத்தாக கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தை கலவர பூமி போல் காட்சிப்படுத்திய இடதுசாரி ஊடகங்களுக்கு, யோகி ஆதித்யநாத்தின் பொற்கால அமைதியான ஆட்சி செருப்படியாக அமைந்து வருகிறது.