இந்தியாவுக்கு எதிரான நயவஞ்சக கருத்து: 94 யுடியூப் சேனல்கள், 747 இணையதளங்களுக்கு தடை - மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்!
இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்ட 94 யுடியூப் சேனல்கள் மற்றும் 19 சமூக வலைதள கணக்குகள், 747 இணையதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.
ராஜ்ய சபாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகள் மற்றும் தவறான பிரசாரங்களை செய்து வரும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் 2021, 22ம் ஆண்டில் தவறான தகவல்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள் 747 இணையதள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளது. இவை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69 ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar