ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி - DRDO விஞ்ஞானிகளுக்கு பாராட்டு!

Update: 2021-07-24 13:06 GMT

ஆத்மநிர்பார் என்பதை மத்திய அரசு அறிமுகப் படுத்தியதிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் அதி நவீன தொழில்நுட்பங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது அந்த வகையில் தற்பொழுது தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்தும் பார்க்கப்பட்டது. தரையில் இருந்து 30 கி.மீ தூரத்தில் வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும். 


மேலும் இது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(DRDO) வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், புதிய தலைமுறை ஏவுகணையான ஆகாஷ் ஏவுகணை இன்று காலை 11:45 மணி அளவில் ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து பரிசோதனை செய்யப்பட்டது இந்த பரிசோதனை தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆகாஷ் ஏவுகணை, DRDO சோதனை ஆளில்லாத வானில் இருந்த இலக்கை, ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது. 


மிகவும் சிறப்பாக இந்த ஏவுகணை மழை அல்லது வெயில் காலத்திலும் ஏவ முடியும் என்பது மற்றொரு சிறப்பம்சம். இந்திய விமானப்படை அதிகாரிகள், பெல் மற்றும் PTL நிறுவன அதிகாரிகளும் இந்த சோதனையில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தனது பாராட்டை தெரிவித்து உள்ளார். விஞ்ஞானிகளுக்கு DRDO தலைவர் சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்தார்.

Similar News