கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் மீண்டும் FASTag மூலம் சுங்கவரி வசூல் உயர்வு!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தி வருவதன் மூலம் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு அதிகரித்து வருகின்றது, இதன் மூலம் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புக்கு முன்னர் பாஸ்டாக் மூலம் பதிவு செய்யப்பட்ட சுங்கவரி வசூல் நிலையை தற்போது மீண்டும் எட்டி வருவதாகச் சாலை மற்றும் போக்குவரத்துக்கு துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
ஜூன் 1-ஆம் தேதி பாஸ்டாக் மூலம் செய்யப்பட்ட சுங்கவரி வசூல் 63.07 லட்சம் பரிவர்த்தனைகளுடன் ₹103.54 கோடியை அடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் 780 டோல் பிளாசாகளில் பாஸ்டாக் மூலம் மின்னணு வசூல் செயல்பட்டு வருகின்றது.
"2021 ஜூன் மாதத்தில் சுங்கவரி வசூல் அதிகரித்து ₹2,576.28 கோடியாகவும், இது மே 2021-இல் ₹2,125.16 கோடியாக இருந்ததை விட 21 சதவீதம் அதிகமாகும்," என அமைச்சகம் கூறியிருந்தது.
கிட்டத்தட்ட 3.48 கோடி பயனர்களுடன், நாடு முழுவதும் பாஸ்டாக் ஊடுருவல் 96 சதவீதமாக உள்ளது மற்றும் பல டோல் பிளாசாகளில் 99 சதவீத ஊடுருவல் உள்ளது.
"மதிப்பீடாக, பாஸ்டாக் ஆண்டுக்கு எரிபொருளில் 20,000 கோடியைச் சேமிக்கிறது, இது விலை மதிப்பான அந்நிய செலாவணி மிச்சப்படுத்தி மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது," என்று அமைச்சகம் தெரிவித்தது.
நெடுஞ்சாலை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாஸ்டாக் காரணமாக NH கட்டண பிளாசாகளில் காத்திருப்பு நேரமும் குறைந்திருக்கிறது என்றும் அது மேலும் குறிப்பிட்டது.
Source: Swarajya Magazine