பிரதமர் தொகுதியில் நடைபெற்ற G-20 கூட்டம்... காசி வாரணாசிக்கு இவ்வளவு சிறப்பு அம்சங்களா...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற G20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கு முக்கியப் பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், இந்த நகரம் தனது நாடாளுமன்றத் தொகுதி என்பதால் G20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் இங்கு நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். காசியை வாழும் பழமையான நகரங்களில் ஒன்றாகக் குறிப்பிட்ட பிரதமர், புத்தர் தனது முதல் சொற்பொழிவை நிகழ்த்திய அருகிலுள்ள சாரநாத் நகரத்தைக் குறிப்பிட்டார்.
"அறிவு, கடமை மற்றும் சத்தியத்தின் பொக்கிஷமாக காசி அறியப் படுகிறது. இது உண்மையில் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரம்" என்று குறிப்பிட்டப் பிரதமர், கங்கா ஆரத்தி நிகழ்ச்சியைக் காணவும், சாரநாத்திற்கு விஜயம் செய்யவும், காசியின் சுவையான உணவுகளை முயற்சிக்கவும் விருந்தினர்களுக்கு அறிவுறுத்தினார். பல்வேறு பின்னணிகள் மற்றும் முன்னோக்குகளை ஒன்றிணைப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் கலாச்சாரத்தின் உள்ளார்ந்த திறனை எடுத்துரைத்த பிரதமர், G20 கலாச்சார அமைச்சர்கள் குழுவின் பணிகள்முழு மனிதகுலத்திற்கும் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்றார்.
"இந்தியாவில் உள்ள நாங்கள் எங்கள் நித்திய மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நமது புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் நாங்கள் மிகுந்த மதிப்பு கொடுக்கிறோம்" என்று மோடி கூறினார், இந்தியா அதன் பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்கவும் புதுப்பிக்கவும் கடுமையாக உழைத்து வருகிறது என்பதை காட்டினார். தேசிய அளவிலும், கிராம அளவிலும் நாட்டின் கலாச்சார சொத்துக்கள் மற்றும் கலைஞர்களை வரைபடமாக்குவது குறித்து அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச்சாரத்தைக் கொண்டாட பல மையங்களை உருவாக்குவதையும் அவர் குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News