GSLV ராக்கெட் தொழில்நுட்ப காரணமாக தோல்வி அடைந்ததா? விளக்கம் தரும் இஸ்ரோ தலைவர் !

இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்த GSLV F-10 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வி அடைந்தது என்று கூறுகிறார் இஸ்ரோ தலைவர்.

Update: 2021-08-12 13:15 GMT

இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்த GSLV F-10 ராக்கெட் திட்டம் தோல்வியை தழுவியது. இதற்கு முக்கியமாக  ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக பல்வேறு ராக்கெட்களை பெண்ணிற்கு வருகின்றது. அந்த வகையில் தற்போது, பூமியைக் கண்காணிப்பதற்காக 2,268 கிலோ எடையுள்ள EOS03 செயற்கைக்கோளை வடிவமைத்து. அதன்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி யானை இன்று அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிட பட்டிருந்தது. 


இந்த செயற்கைக்கோள் GSLV F-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2 வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி ஏவப்பட்டது. ராக்கெட் வானில் பறந்தபோது விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராக்கெட் திட்டமிட்ட இலக்கை அடைய முடியவில்லை. EOS 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட முடியாமல் போனது.


இது தொடர்பாக, இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் கூறுகையில், ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார். கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று GSLV F-10 திட்டம் தோல்வியடைந்தது என்று தெரிவித்தார். கடந்த மார்ச் 5 ஆம் தேதியே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த EOS 03 செயற்கைக்கோள், தொழில்நுட்ப சிக்கல்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு இன்று விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்தது" என்று கூறினார். 

Input: https://www.thehindu.com/news/national/gslv-f10-fails-to-launch-earth-observation-satellite-into-intended-orbit/article35868987.ece

Image courtesy: The Hindu 


Tags:    

Similar News