வேகத்தைக் குறைத்து உள்ளதா? கொரோனாவின் இரண்டாவது அலை: IIT பேராசிரியர் விளக்கம்!

Update: 2021-05-18 12:28 GMT

இந்தியாவின் கொரோனாவின் 2வது அலையின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளை தற்போது நிரூபிக்கின்றன என்றும், இம்மாத இறுதியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம் குறையும் என்று சூத்ரா மாதிரியின் விஞ்ஞானி IIT பேராசிரியர் மனிந்திர அகர்வால் தற்பொழுது கூறியுள்ளார். பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது இந்திய முழுவதும் பொருந்தும் என சொல்ல முடியாது எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், இனிமேல் தான் தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தற்போது தான் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை வேகமெடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இந்தியா இப்போது கொரோனா தொற்றுக்களில் வீழ்ச்சியை சந்திக்கிறோம் என்பதை எங்கள் மாதிரி அடிப்படையில் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது மோசமான நிலை முடிந்துவிட்டது என்று அர்த்தம்.


ஆனால் எல்லா மாநிலங்களும் ஒரே நிலையில் உள்ளன என்று சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டு உள்ளார். மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற உச்சத்தைத் தாண்டிய பல மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன என்று அகர்வால் கூறினார்.

கட்டாயம் இந்தியா தன்னுடைய முன்னேற்பாடுகளில் மூலம் உடனடியாக மூன்றாவது அலை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால் மூன்றாவது அலை என்பது வரும், அதற்கு முன்னர் வரை அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் தற்பொழுது வலியுறுத்தியுள்ளார்.

Similar News