சென்னையில் பரபரப்பு.. ISIS-உடன் தொடர்பு : சையத் அலி மீது N.I.A குற்றப்பத்திரிகை!

Update: 2021-06-16 01:00 GMT

நேற்று NIA அதிகாரிகள் சென்னையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுதல்  மற்றும் வெடிகுண்டு பொருட்கள் வைத்திருந்தல் போன்ற சட்டத்தின் கீழ் கேரளா மாநிலத்தை சேர்ந்த சையத் அலி என்ற நபரை பூந்தமல்லியில்  உள்ள நீதிமன்றதில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 

கடந்த 2019  ஆம் ஆண்டு சென்னை காவல்துறையினர் Airtel மற்றும் Vodafone சிம் கார்டுகளை பல நபர்களின் அடையாள அட்டைகளை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கே தெரியாமல் மோசடியாக செயல்படுத்தி சதி வேலையில் ஈடுபட்ட  நபர்களை சென்னை மற்றும் சேலம் மாவட்டத்தில் கைது செய்தனர். பின்பு கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இந்த சிம் கார்டுகளை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதாக தெரியவந்தது. உடன்நடியாக NIA மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர்.


NIA -வின் விசாரணையில் இந்த சிம் கார்டுகளை ISIS தீவிரவாதிகலான லியாகத் அலி மற்றும் கஜா மோயிதினிடம் வழங்கபட்டதாக தெரிய வந்தது. பின்பு அந்த ISIS தீவிரவாதிகள் அந்த சிம் கார்டுகளை வைத்து சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தல், ஆட்களை தேர்வுசெய்தல், துப்பாக்கிகளை வாங்குதல் மற்றும் நிதி திரட்டுதல் ஆகிய வேலைகளை செய்து வந்தனர். மேலும் மேம்படுத்தபட்ட வெடிக்கும் சாதனத்தை தயாரித்து, சோதனை செய்யும்  பணியிலும் ஈடுபட்டனர் மற்றும் இணையதளத்தில் இருண்ட வளையம் (Dark Web) மூலமாக பல ரகசிய தொடர்புகள் மற்றும் ஜிகாத்திற்கான தயாரிப்புகளை செய்து வந்தனர். இந்த விசாரணை முடிந்த பின்பு அந்த நபர்கள் மீது NIA  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 

இவ்வாறு இருக்கையில் சென்னையில் இன்று சையத் அலியிடம் NIA விசாரித்த போது, பல பெயர்களை வைத்து  ஏமாத்தி வந்த இவன் மிக பெரிய தொழில்நுட்ப ஆர்வலராக இருந்து வருகிறான். அது மட்டுமின்றி கஜா மோயிதினுக்கு இருண்ட வளையத்தில் வெளிநாடுகளுக்கு தொடர்புகொள்ள உதவியதாகவும், பல சந்திப்புகளின் இவனும் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.  இவன் மேம்படுத்தபட்ட வெடிக்கும் சாதனத்தை தயாரித்து, சோதனை செய்ததாக ஒப்பு கொண்டான். மேலும் இவனிடம் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News