சில்லறை மற்றும் மொத்த வணிகத்தைச் சேர்க்க MSME வழிகாட்டுதலில் திருத்தம்!
வெள்ளிக்கிழமை அன்று MSME மற்றும் சாலை மற்றும் போக்குவரத்துக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கீழ் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகத்தை MSME யில் சேர்த்து புதிய MSME கான வழிகாட்டுக்குதல்களை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த டிவ்ட்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மற்றும் MSME களை வலுப்படுத்தவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 2.5 கோடி சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்குப் பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் கீழ், RBI யின் வழிகாட்டுதலின் படி சில்லறை மற்றும் மொத்த வணிகமும் முன்னுரிமை கடனை பெறுவதன் மூலம் பயனடைய முடியும்.
தற்போதைய இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் படி, சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உதயம் பதிவு இணையதளத்தில் பதிவு செய்ய இயலும். சமீபத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பதிவு செயல்முறையை எளிமைப் படுத்தியது. அதன் மூலம் அவர்களுக்குப் பதிவு செய்ய ஆதார் மற்றும் பான் மட்டுமே தேவைப்படும்.