கொரோனவால் பெற்றோர்களை இழந்துள்ள குழந்தைங்களின் தகவலை பதிவேற்றம் செய்யுங்கள் : NCPCR

Update: 2021-05-29 12:29 GMT

தற்போது இந்த கொரோனா காலத்தில் பல குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆகையால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் முதன்மை செயலாளர்களை கோவிட்- 19 நோயால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் தகவல்களை பால் ஸ்வராஜ் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யுமாறு  கூறியுள்ளது .


இந்த இணைய முகப்பு மூலமாக பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவையுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் . பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை சிறார் நிதி சட்டம் 31 இன் கீழ் குழந்தை நலக்குழுவின் முன்பு அவர்களை ஆஜர்படுத்தி தேவையான செயல்முறையை பின்பற்ற  வேண்டும். இந்த கோவிட்-  19 இரண்டாவது அலை நமது நாட்டில் இருக்கும் பல குழந்தைகளை அனாதையாக்கி உள்ளது, இதுவரை வந்த அரசாங்கத்தின் தகவல்படி இந்தியாவில் 577 குழந்தைகளின் பெற்றோர்கள் கோவிட்-19 நோயால் இறந்திருக்கின்றனர் . இந்த குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு  நிதி சார்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் தலா 10 லட்சம் வழங்கப்பட்டது.


மே 21 அன்று உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் " இந்த கோவிட்-19 நோயால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும், அந்த நடவடிக்கையில்  இவர்குளுக்கான இலவச படிப்பு மற்றும் மாதாந்திர உதவி தொகையும் அடங்கும்" என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News