டோல் பிளாசாகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க NHAI புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Update: 2021-05-27 05:13 GMT

டோல் பிளாசாகளில் வாகனங்கள் குறைந்தது 10 வினாடிக்கு நிறுத்தி வைப்பதை உறுதி செய்யவும் மற்றும் வாகனங்கள் காத்திருப்பைக் குறைக்கும் வகையில் புதன்கிழமை அன்று NHAI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. NHAI வெளியிட்டுள்ள அறிக்கையில், சுங்க நிலையங்களில் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்து 100 மீட்டர் தொலைவில் வாகனங்கள் நிற்காமல் இருக்கும் வகையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சில சுங்க நிலையங்களில் பாஸ்டாக் கட்டாயமாக்கப்பட பின்பு காத்திருப்பு நேரமில்லை என்றாலும், "சில காரணங்களால் 100 மீட்டருக்கு மேல் காத்திருக்கும் வாகனங்களை டோல் குள் 100 மீட்டருக்கு உள்ளே வரும் வரை கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்படும்," என்று தெரிவித்திருந்தது.

இதன் காரணத்திற்காக ஒவ்வொரு டோல் பிளாசாவிலும் 100 மீட்டர் தொலைவில் ஒரு மஞ்சள் கோடு குறிக்கப்படும், இது டோல் பிளாசா அப்பேரிடர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்று NHAI குறிப்பிட்டது.

மேலும் NHAI தெரிவித்தது படி, பிப்ரவரி 2021 மத்தியில், 100 சதவீதம் பணமில்லா டோலாக மாறிவிட்டது. 96 சதவீதம் பாஸ்டாக் டோல் பிளாசாவாக மாறிவிட்டது என்று தெரிவித்தது. "நாட்டில் வளர்ந்து வரும் எலக்ட்ரானிக் டோல் சேகரிப்பு முறையை அதிகரித்து, போக்குவரத்துக்குத் திட்டங்களின் புதிய வடிவமைப்பின் படி 10 ஆண்டுகளில் திறமையான கட்டண வசூல் செய்யப்படும்," என்றும் அது தெரிவித்தது.

தற்போது சமூக இடைவெளி கடைப்பிடிப்பது புதிய மாறுதலாக மாறியுள்ள நிலையில், டோல் அபேரடர் மற்றும் ஓட்டுநர்களின் தொடர்பினை ரத்து செய்யும் வகையி பாஸ்டாக் ஒரு விருப்பமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது.


நெடுஞ்சாலைகளில் பயனார்களால் பாஸ்டாக் யின் நிலையான வளர்ச்சி ஊக்கமளிக்கிறது மற்றும் கட்டண நடவடிக்கையில் அதிக செயல்திறனைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/infrastructure/nhai-issues-guidelines-for-toll-plazas-to-reduce-waiting-time/articleshow/82976309.cms

Similar News