1 லிட்டர் பெட்ரோல் 15 ரூபாய்க்கு தர முடியுமா... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பகிர்ந்த சூப்பர் தகவல்...

Update: 2023-07-07 07:21 GMT

சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க இயலும். நாம் தற்போது வரை பெட்ரோலை மற்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம். இதற்காக அதிக அளவில் செலவிடப்பட்டு வருகிறது. இனி இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும். இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது.


சர்வதேச அளவில் தற்போது கா கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து இருந்தும், பல்வேறு பெட்ரோல் டீசல் நிறுவனங்கள் தற்போது வரை விலையில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பொதுமக்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இதை செய்தால் நிச்சயம் விலை குறையும் அதை நீங்கள் செய்வீர்களா? என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்.


பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். நாம் பயன்படுத்தும் வாகனங்கள் சுமார் 60 சதவீதத்திற்கு எத்தனால் நாள் எரிபொருள் கொண்ட காரணமாக மாற்றப்பட வேண்டும். மீதி 40 சதவீதம் மின் வாகனங்களில் பயன்பாட்டிற்கு மாறவேண்டும். சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News