10,000 கி.மீ. டிஜிட்டல் நெடுஞ்சாலைகள்.. முதுகெலும்புக்கு வலு சேர்க்கும் மோடி அரசு!

10,000 கி.மீ. டிஜிட்டல் நெடுஞ்சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கவுள்ளது.

Update: 2023-04-20 01:03 GMT

2024-25- ம் நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 10,000 கி.மீ. தூரத்திற்கு கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பை உருவாக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பணியாற்றி வருகிறது. இந்த ஆணையத்திற்கு சொந்தமாக தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப்போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் இந்த டிஜிட்டல் நெடுஞ்சாலைகள் வலைப்பின்னல் திட்டத்தை செயல்படுத்தும் கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பை தேசிய நெடுஞ்சாலைகளில் அமைப்பதன் மூலம் இது செயல்படுத்தப்படும்.


டிஜிட்டல் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான முன்னோட்ட வழித்தடங்களாக சுமார் 1367 கி.மீ. தூர தில்லி, மும்பை எக்ஸ்பிரஸ் வழித்தடமும், 512 கி.மீ. தூர ஐதராபாத்-பெங்களூரு சரக்குப் போக்குவரத்து வழித்தடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25- ம் நிதி ஆண்டுக்குள் சுமார் 10,000 கி.மீ. டிஜிட்டல் நெடுஞ்சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கவுள்ளது பாராட்டதக்கது.


5ஜி, 6ஜி போன்ற நவீன தொலைத்தகவல் தொழில்நுட்பங்களின் செயல்பாட்டை விரைவுப்படுத்த இந்த வலைப்பின்னல் உதவும். அண்மையில் தொடங்கப்பட்ட 246 கி.மீ. தூர தில்லி-தௌசா-லால்சாட் பிரிவில் 3 மீட்டர் அகலமுள்ள சரக்குப் போக்குவரத்துக்கான பாதையில் கண்ணாடி இழை கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது இந்தப்பகுதியில் 5ஜி வலைப்பின்னலை அறிமுகம் செய்வதற்கு முதுகெலும்பாக பயன்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News