1.15 கோடி பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி: மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தகவல்!

Update: 2022-03-29 08:47 GMT

இந்தியா முழுவதும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் சார்பில் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக வீட்டு வசதி மற்ம் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நலிவடைந்த மக்களுக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்களவையில் இது குறித்து உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான காலம் வருகின்ற மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த திட்டத்தின் வாயிலாக இணைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியிருப்பதால் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று மத்திய அமைச்சர் கூறினார். அனுமதி வழங்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடையும் எனக் குறிப்பிட்டார்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News