சாவர்க்கார் படம் வைத்ததில் ஏற்பட்ட கலவரம் - 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

திப்பு சுல்தான் உருவப்படங்கள் வைத்ததற்காக இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் இளைஞருக்கு கத்திக்குத்து.

Update: 2022-08-17 02:50 GMT

கர்நாடக மாநிலத்தில் தற்போது 114 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது. இதற்கான பின்னணி காரணம் என்னவென்று பார்க்கையில் சாவர்க்கர் மற்றும் திப்பு சுல்தான் உருவப்படங்கள் போன்றவற்றை வைத்ததன் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல். இந்த மோதல் காரணமாக தற்போது இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் முன்னணி படுத்தியதில் இருந்து காங்கிரஸ் கட்சியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 


பா.ஜ.க விநாயக் தாமோதர் சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக முன்னிலைப்படுத்திய காரணம் காரணமாக அதற்கு எதிராக தற்போது திப்பு சுல்தானை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக காங்கிரஸ் கட்சியினர் சித்தரித்துள்ளார்கள். இது இரு தரப்புக்கு இடையே தற்போது எழுப்பும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கர்நாடக மாநிலம் ஷிமோகா என்ற இடத்தில் அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசலை ஒட்டிய பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படத்தை ஓட்டியதற்காக காங்கிரஸ் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு மறுக்கும் வகையில் திப்பு சுல்தான் புகைப்படத்தையும் அவர்கள் அங்கு வைத்துள்ளார்கள். 


இந்த இரண்டு கும்பல்களின் தாக்குதல்களுக்கு இடையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரேம் சிங் என்று இளைஞர் தற்போது கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலமைகள் மோசமாகி உள்ள நிலையில் தற்போது மக்களை வீட்டை விட்டு வெளியே வராத ஒரு சூழ்நிலை காரணமாக 114 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: Junior Vikatan

Tags:    

Similar News