நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் - சொன்னதை செய்து காட்டும் மத்திய அரசு!
154 airports including 14 water aerodromes & 36 Helipads identified under RCS UDAN
கோவாவில் மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, சிந்துதுர்க் மற்றும் ஷிர்தி, கர்நாடகாவில் பிஜப்பூர், ஹாசன், காலாபுரகி மற்றும் சிமோகா, மத்தியப் பிரதேசத்தில் தப்ரா, உத்தரப் பிரதேசத்தில் குஷிநகர் மற்றும் ஜெவார், குஜராத்தில் தொலேரா மற்றும் ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால் உட்பட 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது. இவற்றில் 8 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
பிராந்திய இணைப்பு திட்டமான உதான் திட்டத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய இணைப்புக்கு 14 நீர்வழி விமானநிலையங்கள், 36 ஹெலிகாப்டர் தளங்கள் உட்பட 154 விமான நிலையங்கள் விமான போக்குவரத்துக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. மார்ச் 14ம் தேதி வரை, உரிய அளவு பயன்படுத்தப்படாமல், பயன்பாட்டுக்கு வராமல் இருந்த 66 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பிராந்திய விமான இணைப்பைத் தூண்டுவதற்கும், மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்குவதற்கும், அக்டோபர், 2016ல் பிராந்திய இணைப்புத் திட்டத்தை (RCS) - UDAN (Ude Desh ka Aam Naagrik) தொடங்கியுள்ளது.