உத்தரகாண்ட் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணி தீவிரம்!

வடமாநிலங்களில் ஒன்றாக உள்ள உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக சாலைகள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் பார்வையிட்டார்.

Update: 2021-10-19 10:47 GMT

இதனிடையே வெளிமாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு உத்தரகாண்ட் சென்றுள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர் அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மழை பாதிப்பு குறித்து பிரதமர் மோடி அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார்.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News