ரூ.160 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
குஜராத்தின் ரூ.160 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களை தொடர்பு வைக்கும் பகுதியில் குஜராத் முதலமைச்சர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் உடன் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏக்தா நகரில் இருந்து அகமதாபாத் வரையிலான பாரம்பரிய ரயில், நேரடி நர்மதா ஆரத்தித் திட்டம் , கமலம் பூங்கா, ஒற்றுமை சிலைக்குள் நடைபாதை, 30 புதிய மின் பேருந்துகள், 210 மின் சைக்கிள்கள் கோல்ஃப் கார்ட் எனப்படும் வண்டிகள், ஏக்தா நகரில் நகர எரிவாயு விநியோக கட்டமைப்பு, குஜராத் மாநில கூட்டுறவு வங்கியின் 'சகர் பவன்' ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், கெவாடியாவில் சூரிய சக்தி மையம் மற்றும் அவசர சிகிச்சை மையத்துடன் கூடிய துணை மாவட்ட மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உலகம் முழுவதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. ஆனாலும் இந்தியா புதிய வரலாறுகளை படைத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தேஜாஸ் போர் விமானம், ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச அளவில் 5-வது பெரியபொருளாதார நாடாக இந்தியா முன்னேறி உள்ளது.
Input & Image courtesy: News