2022-ல் ESI திட்டத்தில் 18.86 லட்சம் பேர் இணைப்பு: சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எடுத்துச் செல்ல மத்திய அரசு உறுதி!
நவம்பர் 2022-ல் ESI திட்டத்தில் 18.86 லட்சம் பேர் இணைப்பு மூலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எடுத்துச் செல்ல மத்திய அரசு உறுதி.
தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டத்தில் நவம்பர் 2022-க்கான முதல் கட்ட புள்ளிவிவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. இதன்படி நவம்பர் மாதத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் (ESI) 18.86 லட்சம் பேர் இணைந்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இது 5.24 லட்சம் அதிகமாகும். இனி யாரை காப்பீடு என்பது அறிமுகமாகாத காலத்தில் இருந்து தற்போது வரை மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஏழை எளிய மக்களும் தங்களுடைய உயிர்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் காப்பீடுகளை செய்ய தொடங்கி விட்டார்கள்.
21,953 புதிய நிறுவனங்களும் நவம்பர் மாதத்தில், இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன. நவம்பர் மாதத்தில் இணைந்த 18.86 லட்சம் ஊழியர்களில் 8.78 லட்சம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெறுவதை இந்தப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
2022 நவம்பரில் இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைந்தவர்களில் 3.51 லட்சம் பேர் பெண்கள், 63 திருநங்கை ஊழியர்களும் இந்த மாதத்தில் இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், இஎஸ்ஐ திட்டத்தின் பயன்களை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எடுத்துச் செல்ல உறுதிபூண்டு பணியாற்றி வருகிறது.
Input & Image courtesy: News