வாட்ஸ்அப்பை நிராகரித்த 2 கோடியே 50 லட்சம் பேர்.! மாற்று செயலிக்கு மவுசு அதிகரிப்பு.!

வாட்ஸ்அப்பை நிராகரித்த 2 கோடியே 50 லட்சம் பேர்.! மாற்று செயலிக்கு மவுசு அதிகரிப்பு.!

Update: 2021-01-13 12:42 GMT

வாட்ஸ்அப் செயலியை கண்காணிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் அந்நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. அந்த செயலியை இந்தியாவில் மட்டும் 30 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். யார் யார் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவார்களோ அவர்களின் வங்கி கணக்கு முதல் போன் கேலரியில் உள்ள அனைத்து எண்களும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சென்றுவிடும்.

மேலும், செல்லும் இடம் மற்றும் அனைத்து தகவல்களும் வாட்ஸ்அப் நிறுவனம் இருந்த இடத்திலேயே கண்காணிக்கப்படும் என தகவல்கள் கசியத்தொடங்கியது. இதனால் அந்த செயலியை நிராகரிக்க பயனர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மாற்றாக வேறு செயலியை டவுன்லோடு செய்யவும் பயனர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் உருவான டெலிகிராம் செயலிக்கு மவுசு கூடியுள்ளது.

குறிப்பாக கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் பேர் டெலிகிராம் செயலியை டவுன்லோடு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்படி என்றால் அவர்கள் இதற்கு முன்னர் வாட்ஸ்அப்பை கண்டிப்பாக பயன்படுத்திருக்க வேண்டும். அதன் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் டெலிகிராமை டவுன்லோடு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News