பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் சுமார் 20 நாடுகளுக்கு பரவியிருப்பதாக அமெரிக்க தொற்று நோய் நிபுணர்கள் தகவலை வெளியிட்டனர். இதனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து நேரடியாக விமான சேவைகளுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்திருந்தது. அதே போன்று இந்தியாவிலும் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்திய வந்த 10 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் யாரேனும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா தொற்று இருக்கிறதா என தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில் தற்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அவர்களுடன் விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் இரண்டு பேரும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. முன்பு இருந்த டெல்டா மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை விட இந்த வகையிலான வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Twiter