பொது சேவையில் 20 ஆண்டுகள்! பிரதமர் மோடிக்கு பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ.க. ஏற்பாடு!
பிரதமர் மோடி கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொதுசேவைக்கு வந்து தற்போது 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
பிரதமர் மோடி கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொதுசேவைக்கு வந்து தற்போது 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநில தலைவர்களுக்கு தேசிய தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமரின் 20 ஆண்டு பொது சேவையை பாராட்டும் வகையில் 20 நாட்களுக்கு
20 ஆண்டு பொது சேவையை பாராட்டும் வகையில், 20 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சி பிரதமர் பிறந்த நாளான 13ம் தேதி துவங்கப்படும். அப்போது அவரை வாழ்த்து சுமார் 5 கோடி தபால் கார்டுகளை கட்சியினர் அனுப்ப வேண்டும். அது மட்டுமின்றி ஏழை, எளிய மக்களுக்கு தடுப்பூசி மற்றும் இலவச உணவு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்க வேண்டும்.
மேலும், பிரதமர் சேவைகளை நினைவுபடுத்தும் வகையில் கண்காட்சிகள் நடத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள ரேசன் கடைகளுக்கு சென்று இலவச உணவுப் பொருட்கள் வழங்குவது பற்றி விளக்கமாக பேசி வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.
இளைஞர்கள் இரத்ததானம் முகாம்கள் நடத்த வேண்டும். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலத்தில் 71 இடங்களில் கங்கைகளை தூய்மை படுத்தும் பிரசாரம் பாஜகவால் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dailythanthi
https://www.dailythanthi.com/News/India/2021/09/05051454/5-Crore-Postcards-Hoardings-To-Thank-PM-BJPs-20Day.vpf