₹ 200 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் பாகிஸ்தான் படகுகள் - 6 பேர் கைது மற்றும் பறிமுதல்!

₹ 200 கோடி மதிப்புள்ள போதை பொருட்களுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகுகள் பறிமுதல்.

Update: 2022-09-16 02:18 GMT

குஜராத் கடற்கரையோர பகுதிகளில் சுமார் 200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் வந்த பார்க்க பாகிஸ்தானை சேர்ந்த படகுகளை இந்திய கடலோர காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளார்கள். இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான படகுமூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்திவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து கட்சி கடலோரப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள்.


அப்பொழுது கட்சி காவல் கடலோர பகுதிகளில் இருந்து 33 நாட்டிக்கல் மயில் தொலைவில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த படகு ஒன்று இந்திய நீர்வழிப் பகுதிக்குள் ஆறு கிலோமீட்டர் வரை நுழைந்துள்ளது. அதனை இந்திய கடலோர காவல் படையினை சேர்ந்தவர்கள் இரண்டு அதிரடி விரைவு படங்களில் துரத்தி சென்று தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அந்த படகுகளில் சோதனை செய்தார்கள்.


அப்பொழுது அதில் 40 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 200 கோடி ஆகும் இதனை தொடர்ந்து பாகிஸ்தானிய படகை பறிமுதல் செய்து பாகிஸ்தானை சேர்ந்த ஆறு பேரையும் கைது செய்து தீவிரவு சாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வந்து இதன் பின்னணி யார் இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: India Today News

Tags:    

Similar News