தீண்டாமையை எதிர்த்து குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி 5) திறந்து வைக்க உள்ளார்.
இந்த சிலையானது ஐதராபாத் நகரில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை சமத்துவத்துக்கான சிலையாக போற்றப்பட உள்ளது.
இந்த தகவலை நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என்று ஐந்து விதமான உலோகங்களை கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் ராமானுஜர் ஆவார். மேலும் கடந்த 2014ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: The Hindu