2,435 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி, கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு!

Update: 2021-06-25 10:16 GMT

2,435 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ முறைகேடு வழக்குப் பதிவு செய்தது. வழக்கை பதிவு செய்த பின்னர், மும்பை, டில்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் ஐந்து இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


2,435 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, யெஸ் வங்கி உள்பட 11 வங்கிகள் சார்பில் பாரத் ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் கவுதம் தாபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2015 முதல் 2019 வரையில் வங்கியில் பெற்ற பணத்தை, போலி நிறுவனங்கள் பெயரில் பணப் பரிவர்த்தனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று, மும்பை, டில்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் ஐந்து இடங்களில் சி.பி.ஐ தீவிர சோதனை நடத்தியுள்ளது.

தற்போது வழக்கு பதிவு செயயப்பட்ட கவுதம் தாபர் மீது ஏற்கெனவே யெஸ் வங்கியில் 466 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக  வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News