30 மாநிலங்களில் வேகமாக குறையும் தொற்று: மத்திய அரசு தகவல்.!
இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் கடந்த வாரம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது என்று மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் கடந்த வாரம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது என்று மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல ஆயிரம் பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். முதல் அலையை விட இரண்டாம் அலையில் பல லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அதே போன்று அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்றார் போல் தடுப்பூசி நம்மிடம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் உள்ள 344 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாக இருக்கிறது. 30 மாநிலங்களில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்று குறைப்ந்து வருகிறது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.