எம்.பி நடத்தும் காப்பகத்தில் 300 குழந்தைகளைக் காணவில்லை- அதிர்ச்சி தகவல்கள்.!

எம்.பி நடத்தும் காப்பகத்தில் 300 குழந்தைகளைக் காணவில்லை- அதிர்ச்சி தகவல்கள்.!

Update: 2020-12-27 07:45 GMT

மக்களவை உறுப்பினர் பத்ருதீன் அஜ்மலின் அறக்கட்டளை தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி உதவி பெற்றதாக வந்த புகாரை அடுத்து தற்போது அதே அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படும் ஆறு குழந்தைகள் காப்பகங்களில் 300 குழந்தைகளைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

எம்.பி‌ பத்ருதீன் அஜ்மலுடைய அமைப்புகள் குறித்து அஸ்ஸாம் காவல் துறையும் தேசிய பாதுகாப்பு அமைப்புகளும் விசாரித்து வரும் நிலையில், மர்கசுல் மாரிஃப் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஆறு குழந்தைகள் காப்பகங்களில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் அவற்றுக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகவும், நிதியைப் பயன்படுத்துவதில் முறைகேடு நடப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

 

 

இந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் குழப்பம் நிலவுவதாக தெரிவித்துள்ள குழந்தைகள் நல ஆணையம், பதிவேட்டில் இருந்த 300 குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நிர்வாகிகளால் பதிலளிக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து மர்கசுல் மாரிஃப் அறக்கட்டளை நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

எம்.பி பத்ருதீன் அஜ்மலைப் பற்றி லோக்சபா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில், இந்த காப்பகங்களில் 1,010 குழந்தைகள் வசிப்பதாகக் கூறுகிறது. ஆனால் குழந்தைகள் நல ஆணையத்தின் ஆய்வுக் குழு 778 குழந்தைகள் மட்டுமே காப்பகங்களில் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்தது. IHH என்ற துருக்கி அமைப்பு இங்கு தங்கி இருக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வந்துள்ளது.

 

இந்த அமைப்புக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக துருக்கி நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் IHHஐ விசாரணைக்கு உட்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை குறிப்பிட்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று NCPCR பரிந்துரை செய்துள்ளது. சிறார் நீதிச் சட்டத்தின் படி CCTV பொருத்துவது உள்ளிட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை இந்த காப்பகங்கள் செயல்படுத்தவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 

மேலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்க மூங்கில் குச்சிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், சில ஆசிரியர்கள் இதை ஒப்புக் கொண்டதாகவும் NCPCR அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ச்சிகரமான செயலான பசுக்களை தானமாகப் பெற்று அவற்றை குழந்தைகளின் கண்ணெதிரிலேயே கொன்று, அவர்களுக்கு விலங்குகளைக் கொல்ல பயிற்சி அளித்த கொடூர தகவலும் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மர்கசுல் மாரிஃப் அறக்கட்டளை மீது பல பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  

 

Similar News