பெங்களூருவில் ஓட்டம் பிடித்த 3,000 கொரோனா நோயாளிகள்: நோயை பரப்ப சதி திட்டமா?

சாலையில் நடந்து செல்பவர்களை மருத்துவர்கள் வலுகட்டாயமாக பிடித்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

Update: 2021-04-29 03:10 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாக வீசத்தொடங்கியுள்ளது. அதன் பாதிப்பு கர்நாடகாவிலும் கடுமையாக உள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகளையும் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ரயில் நிலையம், மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சோதனைகளை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.




 


மேலும், சாலையில் நடந்து செல்பவர்களை மருத்துவர்கள் வலுகட்டாயமாக பிடித்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அது போன்று செய்பவர்கள் தங்களின் உண்மையான செல்போன் எண்ணை கொடுப்பதில்லை. இதனால் அவர்களை மீண்டும் சுகாதாரத்துறையினர் தொடர்பு கொள்ளும்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமைறவாகி விட்டதாக அம்மாநில அமைச்சர் ஆர்.அசோக் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கர்நாடகா மாநிலத்தில் நோய் தொற்று அதிகரித்து உள்ளது. அதிலும் பெங்களூருவில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு அவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.




 


அது போன்று தகவல் அனுப்பிய சுமார் 3,000 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள வீடுகளையும் காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். தற்போது அவர்களைகண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது என கூறினார். தயவு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

தற்போது பெங்களூருவில் 3,000 பேர் தலைமறைவாகியுள்ள சம்பவம் அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை நோய் பரப்ப சதித்திட்டம் தீட்டியுள்ளனரா என்றும் பேசப்பட்டு வருகிறது. அது போன்றவர்களை பொதுமக்கள் கண்டுப்பிடித்து மருத்துவமனையில் ஒப்படைப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

Similar News