எப்பொழுது வரும் மூன்றாவது அலை ? விளக்கம் தருகிறார் எய்ம்ஸ் இயக்குனர் !
3வது அலை இந்தியாவில் தொடங்கி விட்டதா? அது எப்போது துவங்கும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு எய்ம்ஸ் இயக்குனரின் பதில்கள்.
இந்தியாவில் தற்பொழுது நோய் தொற்றுகளில் மூலமாக பாதிப்புக்களில் எனக்கு அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மூன்றாவது அலை ஏற்படுமா? இல்லையா? அல்லது மக்கள் பயத்தின் காரணமாக அதிகம் இது பற்றி பேசப்படுகிறது என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு எய்ம்ஸ் இயக்குனர் தற்போது பதில் அளித்துள்ளார். "நம் நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை இப்பொழுது ஏற்படும் என்பதை துல்லியமாக இப்போதைக்கு கணிக்க முடியாது" என்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து டில்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனினும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றா விட்டால் மூன்றாம் அலை ஏற்படலாம். எனவே பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
இப்போதைக்கு மூன்றாம் அலை ஏற்படுமா? இல்லையா? என்பதை துள்ளியமாக கணிக்க முடியாது. மூன்றாம் அலை ஏற்பட்டால் அப்போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது. எனவே அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் நமக்கு கிடைத்துவிடும். எனவே மக்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Image courtesy: India news