சேலம்-உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும்- மத்திய அமைச்சர் உறுதி!

சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை 4 வழி சாலையாக மாற்றப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் உறுதி.

Update: 2022-11-30 02:35 GMT

சேலம் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச் சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்து இருக்கிறார். குறிப்பாக சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எட்டு புறவழி சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களை தடுக்க அவற்றை நான்கு வழி சாடுகளாக விரிவாக்க வேண்டும் என்று செப்டம்பர் இரண்டாம் தேதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பா.ம.க தலைவர் அன்புமணி கடிதம் எழுதுகின்றார்.


இந்த எட்டு வழி சாலைகளிலும் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் சுமார் 116 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் பதில் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். மேலும் பதில் கிடைத்ததில் மத்திய அமைச்சர் மீதும் கட்கரி இது பற்றி கூறுகையில், சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அமைத்த நிறுவனத்தால் அங்குள்ள எட்டு வழி சாலைகளும் நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும்.


ஆறு வழி சாலைகள் 2023 ஆம் மாதத்திற்குள், இரண்டு புறவழி சாலைகள் 2024 ஆகஸ்ட் மாதத்திற்குள் நான்கு வழி சாலைகளாக பிரிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக பா.ம.க தலைவரின் கடிதத்திற்கு உடனே பதில் கிடைத்ததன் காரணமாக அன்புமணி முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News