48 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும்! காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு புகார்!

காவிரி நீரை கர்நாடகா அரசு முறையாக வழங்கவில்லை என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

Update: 2021-09-27 11:33 GMT

காவிரி நீரை கர்நாடகா அரசு முறையாக வழங்கவில்லை என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

டெல்லியில் இன்று காவிரி நதி நீர் மேலாண்ணை ஆணையத்தின் 14வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உட்பட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். அதே போன்று மற்ற மாநிலங்கள் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கூறியதாவது: கடந்த மாதம் 23ம் தேதி வரை கர்நாடகா அரசு தமிழகத்துக்கு 37.3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கொடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் கர்நாடக அரசு கேட்கவில்லை.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. எனவே நிலுவையில் உள்ள 28 டிஎம்சி காவிரி நீரை தர வேண்டும் என வலியுறுத்தியது. அது மட்டுமின்றி இந்த மாதத்துக்கான 20 டிஎம்சி நீரையும் சேர்த்து 48 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று குற்றம்சாட்டியது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:Maalaimalar


Tags:    

Similar News