சமூக வலைதளங்களில் அரசை விமர்சனம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை?.. கேரளா கம்யூனிஸ்ட் அரசு புதிய சட்டம்.!

சமூக வலைதளங்களில் அரசை விமர்சனம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை?.. கேரளா கம்யூனிஸ்ட் அரசு புதிய சட்டம்.!

Update: 2020-11-22 15:30 GMT

சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலான பதிவுகள் செய்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கேரள காவல்துறையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.


கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தில் பினராயி விஜயன் முதல்வராக இருந்து வருகின்றார். இந்நிலையில், இணையதளம் மூலமாக பதிவிடப்படும், அச்சுறுத்தலான பதிவுகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், கேரள போலீஸ் சட்டத்தில் 118 (ஏ) என்ற புதிய பிரிவை உள்ளடக்கிய சட்டத்திருத்த மசோதாவில் கையெழுத்திட்டதாக ஆளுநரின் அலுவலகம் நேற்று உறுதிப்படுத்தியது.


அதன்படி சமூக வலைதளங்கள் அல்லது தகவல் தொடர்பு தளங்கள் மூலமாக எந்தவொரு நபரையும் புண்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட பதிவுகளை உருவாக்கும் அல்லது அனுப்பும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.


மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக கேரளாவை சேர்ந்த அனூப் குமாரன், உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் கருத்துரிமையை பறிக்கின்ற முயற்சியில் கேரளா கம்யூனிஸ்ட் அரசு முயன்றுள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இதற்கு மற்றொரு காரணம் உள்ளது என்று அம்மாநில இளைஞர்கள் கூறுகின்றனர். கொரோவை மாநில அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது. இதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதனை மறைப்பதற்காக கம்யூனிஸ்ட் அரசு இது போன்ற சட்டங்களை இயற்றியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் ஆளும் அரசை விமர்சிப்பதால் தங்கள் கட்சிக்கு பெருத்த அவமானம் ஏற்படுகிறது. இதனால்தான் முதல்வர் பினராயி விஜயன் இப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளனர்.


தமிழகத்தில் இது போன்ற சட்டங்கள் வந்தால் திமுக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். ஆனால் செய்தது அவர்களின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு என்று தெரிந்தும் அமைதியாக இருந்து விடுகிறது.

Similar News