6 இ.எம்.ஐக்கு வட்டி மீது வட்டி வசூலிக்கப்படாது - மத்திய அரசு உறுதி.!

6 இ.எம்.ஐக்கு வட்டி மீது வட்டி வசூலிக்கப்படாது - மத்திய அரசு உறுதி.!

Update: 2020-10-24 18:21 GMT
கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்த ஆறுமாத இ.எம்.ஐ தவணைக்கான வட்டி மீது வட்டி வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த காலக் கட்டத்தில் மாதத் தவணையை முறையாய் செலுத்தியவர்களுக்கு Cash Back முறையில் அவர்கள் செலுத்திய வட்டியில் குறிப்பிட்ட தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வங்கிக் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை கட்டத் தேவையில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனை தொடர்ந்து கட்டப்படாத 6 மாத தவணைத் தொகைகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூடுதலாக வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கொரோனா சூழலால் வாழ்வாதாரம் மற்றும் வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக வட்டி மீது வட்டி விதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இது பற்றி விரிவாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தேசிய மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், தனியார் வீட்டு கடன் நிறுவனங்கள் என அனைத்து நிதி நிறுவனங்களும் வட்டிக்கு வட்டி வசூல் செய்யாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள், கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு மீதான கடன் நுகர்வோர் கடன் என அனைத்து வகையான கடன் பெற்றவர்களும் இதன் மூலம் பயன் பெறுவர்.
அதே நேரத்தில் இந்த காலகட்டங்களில் முறையாக மாத தவணையை செலுத்தியவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்க உள்ளது. இவை அனைத்தும் 2 கோடி ரூபாய் ரூபாய் வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மத்திய அரசு 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி கண்டிப்பாக வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Similar News