63 இந்து அகதிகளுக்கு வீட்டு மனைகள் வழங்கும் திட்டம்: யோகி அரசின் மற்றொரு சாதனை!
பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு உத்தரப் பிரதேசத்தில் வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன.
உத்திர பிரதேச அரசாங்கம் மக்களுக்கு நல்ல முறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது, உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தலைமையிலான அரசாங்கம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவித்த நிலத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களுக்கு அரசு இடமளித்ததாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு பல தசாப்தங்களாக மீரட்டில் வசித்து வந்த இந்துக்கள், சொந்த வீடுகளை கட்டவோ அல்லது நிலங்களை வாங்கவோ முடியவில்லை.
இதுபோன்ற பிரச்சினைகளால் தவிர்த்து வந்த 63 பெங்காலி இந்துக் குடும்பங்களுக்கு கான்பூர் தேஹாட்டில் இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் வீட்டு மனைகளை வழங்கியுள்ளோம். இத்தகைய நிலங்கள் நிலஅபகரிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப் பட்டவை" என்று அவர் கூறினார். மேலும் இந்த லக்னோவில் அரசுப் பணிகளில் பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் இந்நிகழ்ச்சியில் 57 நாயிப் தாசில்தார்களுக்கும், 141 அரசுக் கல்லூரி விரிவுரையாளர்கள், 69 உதவி விரிவுரையாளர்களுக்கும் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துப்படி, "அண்டை நாடான பங்களாதேஷில் துன்புறுத்தலுக்குப் பிறகு இந்தியா வந்த 63 பெங்காலி இந்துக் குடும்பங்கள், பல தசாப்தங்களாக கான்பூர் டெஹாட் பகுதியில் வசிக்கின்றனர், அவர்களுக்கும் 'முக்கியமந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.1.20 லட்சம் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட நிலம் நில வங்கியின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும் அந்த நிலம் பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிகங்களை அமைக்கவும் பயன்படுத்தப்படும். இந்த மீட்கப்பட்ட நிலங்களில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தின் பல வசதிகளும் கட்டப்பட்டுள்ளன" என்று அவர் மேலும் கூறினார். யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலமாக, 1970 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து உத்தரபிரதேசத்தின் கான்பூருக்கு குடிபெயர்ந்த 63 இந்து பெங்காலி குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று நவம்பர் 2021 இல் அறிவித்ததை அடுத்து, மாநில அமைச்சரவை பண உதவி வழங்கவும் முடிவு செய்தது. அந்த அறிக்கை தற்பொழுது நிறைவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.