7 மாதம் அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருந்தது.

Update: 2021-09-27 07:08 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிக மோசமானதாக உள்ளது. தேர்தலை உடனடியாக நடத்த கோரிய மனுதாரர், தற்போதைய நிலையில் அவகாசம் கேட்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று 4 மாதம் மட்டும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நீதிமன்றம் அவகாசம் வழங்கிய நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:DNA India

Tags:    

Similar News