75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள்: பட்ஜெட் உரையின் மிக முக்கிய அம்சங்கள்!

நாடாளுமன்றத்தில் இன்று 2022, 23ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

Update: 2022-02-01 07:27 GMT

நாடாளுமன்றத்தில் இன்று 2022, 23ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 9.05 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம், 65 லட்சம் மக்களுக்கு குடிநீர், நீர் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் வழங்க ரூ.44, 605 கோடியில் கென்பெட்வா இணைப்பு.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மனநலப் பிரச்சனையை சந்திப்போர்களுக்கு தேசிய தொலை நோக்கு மனநலத் திட்டம் ஏற்படுத்தப்படும்.

நதிகள் இணைப்புக்கு 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பார்வத்மலா திட்டத்தின் வாயிலாக மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை விரைவில் மேம்படுத்த நடவடிக்கை.

நாடு முழுவதும் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். வேளாண் நிலங்களை அளவீடு செய்ய, பேரிடர்களால் சேதமடையும் பயிர்களை ஆராய டிரோன்கள் பயன்படுத்தப்படும்.

விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்க நடவடிக்கை.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கிடு.

4 இடங்களில் சரக்கக பூங்காங்கள் அமைக்கப்படும். 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படும்.

பிரதமர் அவாஸ் ஜோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு: வீடு இல்லாதவர்களுக்கு 18 லட்சம் பேருக்கு விரைவில் வீடுகள் கட்டித்தரப்படும். 


பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம் உள்ளிட்டவை அறிமுகம்.

எரிசக்தியை சேமிப்பதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கின்ற வகையில், ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

நில ஆவணங்களை கணினிமயமாக்கி, ஒரே நாடு பத்திரப்பதிவு திட்டம் தொடங்கப்படும்.

நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும். தபால் நிலையங்கள வங்கிகளுடன் இணைக்கப்படும்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News