5 நாளில் 75 கி.மீ தேசிய நெடுஞ்சாலை - மத்திய அரசின் அசாத்திய உலக சாதனை

5 நாட்களில் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை போட்டு முடிந்தது உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

Update: 2022-06-09 00:26 GMT

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது 75 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் வெறும் ஐந்தே நாட்களில் நிறைவு செய்து உள்ளது. இதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அமராவதியை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா பகுதியுடன் இணைக்கும் 75 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை வெறும் 5 நாட்களுக்குள் கட்டி முடித்த காரணத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் பெற்று அசத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான நகல்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய சாலை போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் கின்னஸ் சாதனை சான்றிதழ் புகைப்படங்களை இணைத்து இருந்தார். எனவே இத்தகைய சாலைகளை படைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தனது பாராட்டுகளையும் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார். அமராவதி மற்றும் அகோலா இடையே NH 53 தொடர்ச்சியான சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 105 மணி நேரங்கள், 33 நிமிடங்களில் அமைத்து சாதனை படைத்தது.


மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் குறிப்பாக கன்சல்டன்ட் மற்றும் கன்செஷனர் ராஜ்பத் இன்ப்ராகான் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜகதீஷ் கதாம் ஆகியோரின் உழைப்பையும் அவர்களுடைய முயற்சிகளின் காரணமாக தான் தற்போது கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது ஆகும். மேலும் இரவு பகலாக நம்முடைய பணியாளர்கள் அனைவரும் இந்த ஒரு முயற்சிக்காக ஈடுபட்டு உள்ளார்கள் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy: Asianet News

Tags:    

Similar News