75வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு: முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு !

ஆகஸ்ட் 15ம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி போன்ற நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-13 13:54 GMT

இந்தியாவில் வருகிற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப் படுகிறது. மக்கள் மற்றும் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் மற்றும் பிற நகரங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 


டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகள் வழங்க கூடாது என்றும், செல்போன் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். வாடகை வீடுகளில் குடியிருப்போரை வீட்டு உரிமையாளர்கள் உரிய அடையாள சான்று வைத்துள்ளார்களா? என்று சோதிக்கும்படியும் டெல்லி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக ரயில்வே நிலையம் மற்றும் ஏர்போர்ட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


ஜம்மு-காஷ்மீரிலும் சுதந்திர தினத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Input: https://m.economictimes.com/news/india/police-tighten-security-as-farmers-to-protest-at-jantar-mantar-today/articleshow/84627669.cms

Image courtesy:economic times 


Tags:    

Similar News